ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தாளவாடி-2013ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்.

மரியாதைக்குரியவர்களே,

                                              வணக்கம்.தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தாளவாடி ஒன்றியத்தில் சமூக சேவைக்காக 2013ம் ஆண்டில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.நடத்திய  முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்புங்க.

              

     திருமிகு.நஞ்சுண்ட நாயக்கர் அவர்களும்,அமரர்.M.R.S.இஸ்லாமிய ஐயா அவர்களும்.சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக...

           ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பாராட்டு பெற்ற காட்சி.
                    சத்தி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமிகு.ஐயா அவர்களிடம் பாராட்டு பெற்ற காட்சி.
         குறிப்பு;- இந்நிகழ்விற்கு முன்னர் ஒரு நாள் நடந்த பொதுமக்களுக்கான வழிகாட்டுதலுக்கான '' நம் பார்வை உலகமாகாது'' நிகழ்ச்சியில் திரு.பரமேஸ் டிரைவர் அவர்களை பாராட்டி புத்தகம் பரிசளித்துள்ளார்.திருமிகு.டி.எஸ்.பி.ஐயா அவர்களது சமூகப்பார்வைக்கு தலைவணங்குகிறோம்.


  தாளவாடி மக்கள் மானாவாரி விவசாயத்தையே நம்பியுள்ள நிலையில் கால்நடைகளும் அவர்களுக்கு  வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
 தாளவாடி மக்களுக்கு ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு உண்டு.
கல்மண்டிபுரம் மக்களின் ஆன்மீக நிகழ்வு.





















                       தாளவாடி ஒன்றியம் மல்லன்குழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ,மாணவியர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,சுதந்திர தினம் பேரணி நடத்தி கொண்டாடியபோது......


                தாளவாடி ஒன்றியம்  பனகஹள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்...


               தாளவாடி ஜே.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி மையத்தில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தபோது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி கிளை மேலாளர் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
               தாளவாடி ஜே.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி மையத்தில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தபோது  கருத்துரையை உன்னிப்பாக கவனிக்கும் சான்றோர்களில் சிலர்..


             தாளவாடி ஜே.எஸ்.எஸ்.தொழிற்பயிற்சி மையத்தில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தபோது   டிவைன் மெட்ரிக் பள்ளி தாளாளர் அவர்கள் சிறப்பான கருத்துரை வழங்கினார்.
                  தாளவாடி ஒன்றியம் ஆசனூரில் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடந்தபோது கலந்துகொண்டு கருத்துரை வழங்கிய காவல்துறை,வனத்துறை,தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை,மதுவிலக்கு பிரிவு,உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு,,,


                 ஆசனூர் காவல் நிலையம் முன்பு காவல்துறை அதிகாரிகளும்,தீயணைப்பு துறை அதிகாரிகளும்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி சாலை பாதுகாப்பு அறிவுரை வழங்கியபோது........





                  தாளவாடி பேருந்து நிலையம் அருகில்  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தபோது திருமிகு.மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களின் விழிப்புரை ..
                        தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுனர் திரு.ரமேஷ்  அவர்களுக்கு சாலை பாதுகாப்பு வாரவிழா நிகழ்வில் பண்ணாரி அம்மன் கரும்பு அலுவலகத்தில் லாரி ஓட்டுனர்களுக்கு யோகா பயிற்சி அளித்தமைக்காக பாராட்டி பரிசு வழங்குகிறார்.திரு.மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்கள்.(குறிப்பு;-திரு.ரமேஷ் அரசு பேருந்து ஓட்டுனர் அவர்கள் பணிக்கு சேர்ந்த பின்னரே பாரதியார் பல்கலை கழகத்தில் யோகா பயிற்சிக்கான பட்டயச்சான்று பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

                    சாலை பாதுகாப்புவாரவிழாவின்போது தாளவாடி தனியார் வாகன ஓட்டுனர் திரு.மணி அவர்களுக்கு சாலையில் மற்ற ஓட்டுனர்களைவிட பொறுப்புடனும்,கவனத்துடனும் வாகனம் ஓட்டுவதாக அப்பகுதி மக்களின் கருத்துக்கணிப்பின்படி பாராட்டு பெற்று பரிசு பெறும் காட்சி..



                    தாளவாடி காவல் நிலையம் அருகில் புத்தக கண்காட்சி நடந்தபோது புத்தகம் வாசிப்போம்,நிகழ்வில் ஒரு பகுதி..
                திரு.V.பாலமுருகன் அவர்கள். தாளவாடி புத்தக கண்காட்சியில் நன்றியுரை வழங்கிய காட்சி.( V.பாலமுருகன் அவர்கள் பொருளாளர்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு..)

                   தாளவாடி ஒன்றியம்,கெத்தேசால் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மூன்று நாட்கள் புத்தக வாசிப்பு முகாம் நிகழ்வில் பங்கு கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்துள்ள சான்றோர்களில் ஒரு பகுதி....
          போதை பொருட்களை தவிர்ப்போம்- வாகன ஒலிபெருக்கி பிரச்சாரத்திற்கு தயாராகும் திரு.P.S.பெரியசாமி அவர்கள்.ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ்-கோபி.
                  தாளவாடி ஒன்றியம்,அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளியில் நடந்த கருத்தரங்கில் ''போதை தவிர்ப்போம் நம்மை காப்போம்'' என அறிவுறுத்திய ஆசிரியப்பெருமகனார் திரு.ரமேஷ் அவர்கள்.
                  குறிப்பு;
                          இந்தப்பள்ளியில் உள்ள ஆசிரிய,ஆசிரியைகள் ஒருவர் கூட வெற்றிலை,பாக்கு,புகையிலை பொருட்கள்,மது, உட்பட எந்த போதை பொருட்களையும் பயன்படுத்துவதில்லை என்பது பாராட்ட வேண்டிய விசயம்.இதேபோல அனைத்து பள்ளி ஆசிரியர்களும்,ஆசிரியைகளும் நடந்துகொண்டால் வழிகாட்ட சிறப்பான தகுதி பெற்றதாக அர்த்தம்.



                          நெகிழி (PLASTIC) பொருட்களை தவிர்ப்போம் சுற்றுச்சூழலை காப்போம்-மூன்று நாட்கள் விழிப்புணர்வு முகாமில் கொங்கள்ளி சுற்றுப்புற வனப்பகுதியில் களப்பணி ஆற்றிய மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டபோது பயன்படுத்திய பேனர்..
                      நெகிழி பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்''என தாளவாடி பேருந்து நிலையத்தில் மனித உரிமைகள் கழகம்-திரு.A.பாபு தலைவர் அவர்கள் மற்றும் திரு. T.V.ஆனந்த நாராயணன் செயலாளர் அவர்கள்  நோட்டீஸ் பிரச்சாரம் துவக்கிவைத்த காட்சி.

               கொங்கள்ளி கோவில் வனப்பகுதியில்  நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தும் களப்பணியினை வனத்துறையினர் துவக்கி வைத்த காட்சி.
                     திரு.துண்டையன் அவர்கள்,வனவர் மற்றும் வனக்காப்பாளர்.மற்றும் வேட்டைத்தடுப்புக்காவலர்கள்  மேற்பார்வையில் சத்தியமங்கலம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் களப்பணி,கொங்கள்ளி கோவில் வனப்பகுதி.
கொங்கள்ளி கோவில் வனப்பகுதியில்   நெகிழி குப்பைகளை அகற்றும் களப்பணி ஆற்றிய மாணவர்களுக்கு திரு.M.R.சுப்பண்ணன்,அவர்கள்,கிராம வனக்குழு தலைவர்-கெட்டவாடி.உணவு வழங்கும் காட்சி.கொங்கள்ளி கோவில் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த அனைவருக்கும் இரண்டு நாட்களுக்கான உணவு செலவினை ஏற்று உபசரித்த திரு.M.R.சுப்பண்ணன் அவர்களது சேவை மனப்பாங்கினை பாராட்டுகிறோம்.

                 தாளவாடியில் -'' நெகிழி பொருட்களை தவிர்ப்போம்,சுற்றுச்சூழலை காப்போம்'' என நோட்டீஸ் பிரச்சாரத்தினை திரு.M.R.சுப்பண்ணன்அவர்கள்,கிராம வனக்குழு தலைவர்,கெட்டவாடி.  திரு.P.யேசுதாசன் PALM2NGO அவர்கள்,திட்ட ஒருங்கிணைப்பாளர்,திரு. R.மாதேஷ் அவர்கள்,தலைமை ஆசிரியர்,ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி,தாளவாடி,திரு. V.பாலமுருகன் அவர்கள்,தாளவாடி,திரு. V.ஆனந்தன் அவர்கள்,தாளவாடி ஆகிய சான்றோர்கள் துவக்கி வைத்த காட்சி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக