சனி, 21 நவம்பர், 2015

காமராஜர்........










 
மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம். காமராஜரின் நற்குணங்கள்.உங்களது சிந்தனைக்காக........
     கல்விக்கு கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர்‬ ஒரு சகாப்தம்"..       
 ''முடியும் என தெரிந்தால் முயற்சி எடு
       முடியாது என தெரிந்தால் முடிப்பதற்குரிய பயிற்சி எடு........''.எனவும்

     ''கல்விக்கு காசு வாங்குவது தாய்ப்பாலை விற்பதற்கு சமம்''....!!!எனவும் முழக்கமிட்டவர் காமராஜர்.
     #‎பெருந்தலைவர்‬  காமராஜருக்கு‬ இந்தியும், ஆங்கிலமும் சரளமாகப் பேச தெரியும். அதற்காக எல்லா இடத்திலும் பேசி பெருமை அடித்துக் கொண்டதில்லை.
ஆனால், பொதுகூட்டங்களில் ‪#‎தமிழில்தான்‬ பேசுவார். ஒரு சமயம் இரஷ்யத் தலைவர்கள் டெல்லி வந்தபோது, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் சரியான ஆங்கில வார்த்தையை உபயோகிக்காதபோது, அதைச் சுட்டிகாட்டித் திருத்தினார் 

எந்த கீழ் ஜாதிக்காரன் படிக்கமா இருந்திருக்கான்? எந்த கீழ் ஜாதிக்காரன் கட்ன பாலம் இடிஞ்சு விழுந்திருக்கு? ங்றேன்..
பெருந்தலைவர் ‪‎காமராஜர்‬


பதவிப்பிரமாணத்தின் போது காமராஜர் சொன்னது
* நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்
* அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது
* படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து
* திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.
* ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.
* நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்
* அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்
* சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்
* சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை
* தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது
* நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்
* பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்
* நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது
* நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் * லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.
* அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.
* நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது
* ஏழை மக்களைத் துன்பத்திலிருந் து நீக்க முடிந்த மட்டும் பாடுபடுவேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை
* நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்
* ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்
========================================================
        ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்....!

========================================================

            தமிழகத்தில் முதல்– அமைச்சராக பெருந்தலைவர்  காமராஜர்‬ இருந்தபோது ஏழை குழந்தைகள் பள்ளிக்கு படிக்க வராதது சாப்பாட்டுக்கு வழிஇல்லாமைதான் என்பதை கண்டறிந்தார்.
அதன் விளைவாக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். நாடு முழுவதும் ஒரு முன்மாதிரி திட்டமாக போற்றப்பட்ட இந்த திட்டத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.தற்போது தமிழகத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்தியா முழுவதும் மத்திய அரசும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்தி நடத்தி வருகிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவ– மாணவிகள் பலன் அடைந்து வருகிறார்கள்.கல்விக்கண் திறந்தவர் என்று போற்றப்படும் காமராஜரால் பள்ளிக் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவு திட்டத்துக்கு மத்திய அரசு காமராஜர் பெயரைசூட்ட வேண்டும் 
=================================================================


காமராஜர் !
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

====================================================================
முதலமைச்சர் காமராஜரும்.. பிரதமர் நேருவும்..
கூட்டமொன்றில் பங்கேற்க.. மதுரை
அருகே.. காரில் சென்று
கொண்டிருந்தார்கள்..!!
உரையாடலின் நடுவே.. நினைவு வந்தவரான.
நேரு. " மிஸ்டர் காமராஜ் உங்கள்
சொந்த ஊர் இந்த பக்கம் தானே..?
என்று கேட்கிறார்..!!
"ஆமாங்க இன்னும் கொஞ்சம்
தூரத்தில் தான் இருக்கிறது..!!என்கிறார்
காமராஜர்..!!
"அப்படியானால் உங்கள் தாயாரை
பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு
செல்ல வேண்டும் அல்லவா..? என்று நேரு
அவர்கள் கேட்க..
"இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?"
என்று காமராஜர் மறுக்கிறார்..!!
அதற்கு நேரு அவர்கள்...
"இவ்வளவு தூரம் வந்து விட்டு.. உங்கள்
தாயாரை பார்க்காமல் சென்றால்..
நன்றாக இருக்காது.. நான் பார்த்தே ஆக
வேண்டும்.. என்னை அவர்களிடம் கூட்டிச்
செல்லுங்கள்..!!" என்று அன்பு
கட்டளையிடுகிறார்
ஆமோதித்த காமராஜர்..
வண்டி சற்று தூரம் சென்றதும்..
ஓட்டுனரிடம்.." தம்பி வண்டியை இப்படி
ஓரங்கட்டு..!!" என்று வண்டியை நிறுத்த
சொல்கிறார்..!!
அது வீடுகளே இல்லாத பகுதி.. இரு
புறங்களிலும் விவசாய நிலங்கள் பகுதி..!!
அந்த நிலங்களில் பெண்கள் களை பறித்து
கொண்டிருந்தனர்..!!
தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து..
செல்ல சொன்னால் இப்படி
அத்துவான வெயிலில்.. வண்டியை
நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன்
வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு..
காமராஜர்
களை பறித்து கொண்டிருக்கும்
பெண்கள்.. கூட்டத்திலிருந்து வயதான
பெண்மணி.. ஒருவரை அழைக்கிறார்...
"ஆத்தா நான் காமராசு வந்து
இருக்கிறேன்.."!! என்று கூவுகிறார்..!!
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்..
"காமராசு வந்திட்டியாப்பா..
நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை
கண்ட மகிழ்ச்சியில்.. உள்ளம் நெகிழ..
அருகில் வருகிறார்.. காமராஜரின்
தாயார்..!!
தாயும் மகனும் அளவளாவிக்
கொள்கிறார்கள்..!!
பிறகு நேரு அவர்களை காட்டி.. அறிமுக
படுத்துகிறார் காமராஜர்..!!
நேருவால்
தன் முன்னால் நடப்பதை பார்த்து.. நம்ப
முடியாமல் சிலையாக நிற்கிறார்..!!
அவர் தான் நம் காமராஜர்.

 =============================================================



பெருந்தலைவர் காமராஜர் தமிழக முதல்
அமைச்சராக இருந்த போது, அவரது ஆட்சிக்
காலத்தை பொற்காலம் என்று சொல்கிறோம்.

அவரது ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில்
நிறைவேற்றப்பட்ட உன்னதத் திட்டங்கள் சில
இங்கே தரப்பட்டுள்ளன

அமராவதி அணை
ஆரணியாறு அணை
வைகை அணை
மணிமுத்தாறு அணை
மலம்புழா அணை
சாத்தனூர் அணை
மேட்டூர் கால்வாய்
குந்தா அணை
வாலையார் அணை
கீழ்பவானி அணை
கிருஷ்ணகிரி அணை
புள்ளம்பாடி வாய்க்கால்
பரம்பிக்குளம் – ஆழியாறு அணை..!!
================================================================
 மழை வெள்ளத்தில் காமராஜர்.....
காமராஜர் ஒரு சகாப்தம்”
1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர். அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார்.
ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள். ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.”
=================================================================

 காமராஜர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் !
                காமராஜர் முதல்வராக இருந்தபொழுது, அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன். ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் .அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார்.உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து, அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார்.
பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர், எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது, உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின்விசிறி ஏன் வாங்கித் தந்தார்? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே.இது கூட லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார்.
======================================================

       அரசு மருத்துவமனை..
          பெருந்தலைவர் காமராஜர்‬ தமிழக முதல்வராக பதவி வகித்தபோது, அவரது சகோதரி நாகம்மையிடம்‬ இருந்து ஒரு கடிதம் வந்தது.
அந்த கடிதத்தில்...
அண்ணே! எனக்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் பார்க்க பெரிய டாக்டரிடம் போக பணமில்லை. எனவே உடனே பணம்‬ அனுப்பி வை என்று எழுதியிருந்தது.
அதற்கு பதில் அளித்த காமராஜர்...
அன்பு நாகம்மை, நீ பெரிய டாக்டரிடம் எல்லாம் போக வேண்டாம். மதுரையில் அரசாங்க ஆஸ்பத்திரி பெரிதாகத்தான் இருக்கிறது.
அங்கு சென்றால் இலவசமாக வைத்தியமும், மருந்தும் கிடைக்கும்.
போக்குவரத்து செலவுக்கு 20 ரூபாய் அனுப்பி உள்ளேன். இதற்கு மேல் என்னிடம் எதிர்பார்க்காதே...
என்று பதில் வந்தது
=============================================
 திரைப்படம் தேவையா?.......

காமராஜர் முதல்வராக இருந்தபோது ஓர் அதிகாரி அவரிடம், 'குந்தா அணைக்கட்டை மலையைக் குடைந்து அருமையாகக் கட்டியிருக்கீங்க...! இதை நமது வாயால் சொல்வதை விட, திரைப்படமா எடுத்துக் காண்பித்தால் பாமர மக்களுக்குக்கூட நன்றாகப் புரியும், என்றார்.
அதற்கு காமராஜர் 'சரி, அதற்கு எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார். அந்த அதிகாரி, 'ஏறக்குறைய மூன்றூ லட்ச ரூபாய் வரை செலவாகும்' என்றார்.
காமராஜரோ, அடப்பாவிகளா...மூன்று லட்சமா..? இந்த மூன்று லட்சம் ரூபாய் இருந்தால், நான் இன்னும் பத்து ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டி விடுவேன். புள்ளைங்க படிக்க வழியைக் காணோம், நீ நியூஸ் ரீல் காட்டி அரசாங்கம் செய்ததை எனது சாதனைனு வெளிச்சம் போட்டுக் காட்டப் பாக்குறியா...போ...போ...'என்று மறுத்து விட்டார்...!

============================================


       பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்.”
(காமராஜர்)

================================================================

           காமராஜர், விருதுப்பட்டியில் வசித்துவந்த தனது தாயாருக்கு மாதா மாதம் செலவுகளுக்காக ரூபாய் 120 அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவர் முதலமைச்சர் ஆன பின்பு சிவகாமி அம்மாள் காமராஜருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், ”நீ முதலமைச்சராக ஆன பின்பு, என்னை வந்து ஏகப்பட்ட பேர்கள் வந்து பார்க்கிறார்கள். அவர்களுக்கு டீ, காபி, சோடா வாங்கிக் கொடுக்கக்கூட என்னால் முடியவில்லை. எனவே எனக்கு அனுப்பும் மாதாந்திரப் பணம் 120 ரூபாயை, 150 ரூபாயாக் கூட்டி அனுப்பி வைக்கவும்” என்று எழுதியிருந்தார்.
காமராஜர் இந்தக் கடிதத்தைப் படித்த பின்னரும், தாயாருக்கு மாதா மாதம் வழக்கம் போல் அனுப்பும் 120 ரூபாயைத்தான் அனுப்பி வந்தார். ஏன் கூடுதல் பணம் அனுப்பவில்லை என்று கேட்ட நண்பர்களிடம் ”அப்படி நான் தாயாருக்கு அதிகமாகப் பணம் அனுப்பினால் அவுங்க வீட்டிலிருக்காமல், வெளியூருக்கும் போய்விடுவார்கள். வயதான காலத்தில் வீட்டில் இருப்பதுதான் நல்லது” என்றார்.
மற்றோர் முறை சிவகாமி அம்மையார் ஒரு நூறு ரூபாய் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். அப்போது காமராஜரும், ஆர்.வி. சாமிநாதனும், சென்னை, தி.நகர், திருமலைப் பிள்ளை வீட்டில் நன்கொடையாக வந்த பணத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
காமராஜிரின் உதவியாளர் வைரவன் அந்தக் கடிதத்தைப் பற்றிக் கூறினார். உடனே ஆர்.வி. சுவாமி நாதன், ரூபாய் நூறு தானே என்று தான் எண்ணிக்கொண்டிருந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினார். இதைப்பார்த்த காமராஜர் அந்த ரூபாய் நோட்டை அவரிடமிருந்து பிடுங்கி, நன்கொடைப் பணத்தோடு சேர்த்துவிட்டார்.
ஒரு முறை முதல் அமைச்சராக இருந்த காமராஜரைப் பார்த்து நண்பர் ”நீங்கள்தான் சம்பளம் வாங்குகிறீர்களே. அதையெல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.
உடனே காமராஜர்,”தாயாருக்கு செலவுக்கு பணம்அனுப்பி வைக்கிறேன். எனது சாப்பாட்டு செலவுகள் போக, அடிக்கடி கட்சி வேலைகளுக்காக புதுடெல்லிப் போகிறேன். அதற்கெல்லாம் சம்பளப் பணம் செலவழிந்து போகிறது. முதலமைச்சராகப் போனால் அரசாங்கச் செலவு. கட்சி வேலைகளுக்காகப் போனால் என் சொந்தப் பணத்திலேதான் சென்று வருவேன்” என்று பதில் அளித்துள்ளார்.
அரசையும், அரசோடு கட்சியையும் கலக்காதவர் காமராஜர், மட்டுமே.
காமராஜர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்த போது, காமராஜரின் தங்கை மகன் ஒரு வேலை வாய்ப்புக்காக, தனது தாய் மாமனான காமராஜரிடம் வந்தார். தான் ஒரு வேலைக்கு மனுப்போட்டிருப்பதாகவும், சிபாரிசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான்.
அதற்குக் காமராஜர்,”நான் சிபாரிசு செய்யமாட்டேன். நீ அந்த வேலைக்கு தகுதியானவனாக இருந்தால், அவர்கள் தானாகவே உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். தப்பித் தவறி நீ, என் பெயரை உன் வேலைக்காகச் சொல்லக்கூடாது. போய் வா” என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இன்றைய அரசியல்வாதிகளில் காமராஜரைப் போல் யாரையும் பார்க்க இயலுமா?.
============================================== 

நேருவை பிரம்மிக்க‍ வைத்த‍ ‘தமிழர்’!
இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, சென் னை நகரத்தை கைப்பற்றி விட வேண்டும். என்று ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருந்தனர். தெலுங்கு பேசும் மக்க ளைக் கொண்ட ஆந்திர மாநிலம் உருவாக்கப் பட்ட பிறகும் கூட ஆந்திரமாநில மக்களுக்கு சென்னை மீது ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் 1948-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தது. அப்போது சென்னை நகரம் ஆந்திராவுக்கே சொந்தம் என் பதை நிலை நாட்ட, ஆந்திர காங்கிரஸ்காரர்கள் பெருமளவில் தேர்தலி ல் போ ட்டியிட்டனர். தேர்தலில் வென்று சென்னையை ஆந்திராவுடன் இணைத்து விட வேண்டும் என்பது அவர்களது திட்டமாகும்.
அந்த சமயத்தில் காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந் தார். ஆந்திரா காங்கிரஸ்காரர்கள் திட்ட மிட்டு காய்களை நகர்த்து வதை அறிந்த அவர், சென்னை மாநகராட்சித் தேர்த லில் தமிழக காங்கிர சார் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவித்தார். எல் லோரும் காம ராஜரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
அதன் பிறகு காமராஜர் தன் அதிரடியை த் தொடங்கினார். தமிழ்நாடு எல்லையைக் கமிட்டி என்ற ஒரு அமைப் பை உருவாக்கினார். அந்த அமைப்பு சார்பில் “தமிழ் நாட்டுக்கே சென்னை நகரம் சொந்தம்” என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு அந்த அமைப்பின் சார்பில் வேட்பாளர் கள் நிறுத்தப்பட்டனர்.
தேர்தலில் தமிழ் நாடு எல்லைக்கமிட்டி சார்பில் காமராஜர் நிறுத்திய வேட்பாளர் கள் அமோக வெற்றி பெற்றனர். ஆந்திர காங்கிரஸ்காரர்கள் படுதோல்வியைத் தழுவினார்கள். இதன் மூலம் சென்னை நகரை காம ராஜர் மீட்டு, தமிழ்நாட்டுடன் தக்க வைத்துக் கொண்டார்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆந்திர மாநில தலைவர்கள்,சென்னை நக ருக்கு உரிமை கொண்டாடுவதை கை விட்டு விட்டனர். இதன் மூலம் காமராஜர் ஓரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஒன்று தமிழக-ஆந்திர காங்கிரஸ் தலைவ ர்களிடம் ஏற்பட இருந்த சண்டைக்கு முற்று ப்புள்ளி வைத்தார்.
இரண்டாவது சென்னை நகரம் கை நழுவி செல்லாமல் பார்த்துக் கொண்டார். சுதந்தி ரம் அடைந்த மறு ஆண்டே எழுந்த இந்த பிரச்சினையால் பிரதமர் நேரு மிகுந்த பதற்றத்துடன் இருந்தார். ஆனால் பிரச்சினையை காமராஜர் (தமிழர்) கையாண் ட விதத்தை கண்டு நேரு பிரமித்துப்போனார்.
கர்ம வீரர் என்றால் என்ன அர்த்தம்:
பெருந்தலைவர் காமராஜருக்கு அமைத்த ஒரு சிறப்புப்பட்டம் கரும வீரர் காமராஜர் என்பதாகும். கர்மமே கண்ணாகக் கொண்டவர் என்று இதற்கு அர்த்தம். கரும வீரர்கள் நட வடிக்கைகள் பற்றி குமரகுருபரர் பட்டியலில் தந்துள்ளார். மெய் வரு த்தம் பாரார், பசிநோக்கார், கண்துஞ் சார், செல்வி அருமையும் பாரார், அவமதிப்பும் நாடார் என்பது அது.
9 ஆண்டுகள் ஆட்சியில் ஒரு நூற்றா ண்டுச் சாதனைகளை காமராஜர் நிக ழ்த்தினார். அது எவ்வாறு மெய் வருத்தம் பாராது, பசிநோக்காது, கண் துஞ்சாது, அருமை பார்க்காது, அவமதிப்பையும் பொருட்படுத்தாது, என வே தான் அவர் கருமவீரர் ஆனார். கருமமே கண்ணாக காமராஜர் உழை த்த காரணத்தால்தான் தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் கிராமங்களில் 75 சதவீதம் மின் வசதி பெற்றன.
========================================================

        மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!
ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார். பத்திரிகையாளர் சாவி ஒருமுறை சந்திக்கச் சென்றபோது ஜான் கன்டர் எழுதிய இன்சைட் ஆப்பிரிக்கா என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தாராம்!
அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பிரஸ்மீட். 50 கேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார். இசை விழாவைத் தொடக்கிவைக்க அழைத்தார்கள். 'இசை விழாவைத் தொடக்கிவைப்பதில் பெருமைப்படுகிறேன்' என்று மட்டுமே சொல்லி விட்டு இறங்கினார்!
நாற்காலியில் உட்காருவது அவருக்குப் பிடிக்காது. சோபாவில் இரண்டு பக்கமும் தனது நீளமான கைகளை விரித்தபடி உட்காரவே விரும்புவார். முதல்வராக இருந்தபோதும் தலைமைச் செயலகத்தில் பிரத்யேகமாக சோபா வைத்திருந்தார்!
கடிகாரம் கட்ட மாட்டார். சின்ன டைம்பீஸைத் தனது பையில் வைத்திருப்பார். தேவைப்படும்போது எடுத்துப் பார்த்துக்கொள்வார்!
'ஆறாவது வரை படித்தவர்தானே! என்ற அலட்சியத்துடன் முதல்வர் காமராஜரின் அறைக்குள் அலட்சியமாக நுழைவார்கள் அதிகாரிகள். வெளியே வரும்போது அவர்களின் வால், கால்சட்டைக்குள் மடக்கிச் சொருகப்பட்டு இருந்தது!' என்று அவரது அறிவாற்றலை மெச்சினார் ஆர்.வெங்கட்ராமன்!
தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!
தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!
'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!
விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.
கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!
ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!
இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக