செவ்வாய், 10 நவம்பர், 2015

     நூலகம் குறித்த அறிஞர்களின் கருத்துகள்:
நூலகம் என்பது இயக்ககம் அல்ல! இயக்கம் என்கிறார் இந்திய நூலகவியல் தந்தை எஸ்.ஆர். ரங்கநாதன்.
அறிவால் உயர்ந்து அரியாசனம் செய்வோம் என்கிறார் தேசத்தந்தை மகாத்மா காந்தி
நூல்களால் நைந்த நேயங்கள் தைப்போம் என்கிறார் அன்னை இந்திரா காந்தி
நூலகம் நமக்கு ஒய்வு நேர உலகம் என்கிறார் பேரறிஞர் அண்ணா
புத்துலகம் படைக்க புத்தகம் படிப்போம் என்கிறார் அப்துல் கலாம்
புத்தகம் படிப்போம் வித்தகம் படிப்போம் என்கிறார் பெரியார்
நுட்பங்கள் நுகல, நூலகங்கள் செல்வோம் என்கிறார் கிரகாம்பெல்
அறிவால் உயர்வோம், அறிவாள் தவிர்ப்போம் என்கிறார் பில்கேட்ஸ்
படிப்போம், படிப்போம், பதிப்போம் என்கிறார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
ஒரு நூலகம் திறக்கப்படும் போது 100 சிறைச்சாலைகள் மூடபடுகின்றன என்கிறார் சுவாமி விவேகானந்தர்
புத்தகத்தில் உலகத்தை படிப்போம், உலகத்தையே புத்தகமாக படிப்போம் என்கிறது உலக பொதுமறையாம் திருக்குறள். அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகத்தை பரிசாக கொடு என்கிறது சீன பழமொழி. என்னை தேடி நீ வந்தால் உன்னை தேடி உலகம் வரும் என்கிறது நூலகம்.


பொன்மொழிகள்  -  நூலகம்

1.அறிவுப் போராட்டத்துக்கான படைக்கலன்கள் செய்யும் படைவீடு நூலகம்! - இங்கர்சால்

2.எனது நூலகமே எனக்குப் போதிய
 பெருஞ்செல்வமாகும்! - ஷேக்ஸ்பியர்

3.நூலகங்கள் பண்டை உலகின் சின்னங்கள்;
 இக்கால உலகின் புகழ்க்கொடிகள்!
 - லாங்ஃபெல்லோ

4.இக்காலத்தின் உண்மைப் பல்கலைக்கழகம்
 நூல்களின் தொகுதிதான்! - கார்லைல்

5.நூலகமே ஒரு தனி உலகம். அதன் உள் சென்று
 வந்தால் அறிஞனாகலாம் - கலைஞனாகலாம்
 - கவிஞனாகலாம்! - அபீப் முகமது ஜின்னா

6.என் நூலகமே என் பணிக்கு அடிப்படை; என் உள்ளும் புறமும் இன்பமும் ஆறுதலும் தருவதாகும்! - கிப்பன்

7.நூல்கள் இல்லாத வீடு சாளரம் (ஜன்னல்) இல்லாத வீடு!
 - ஹோம்ஸ்மான்

8.தோழனுக்காகக் கூடத் திறந்து சொல்லாத சொற்கள், கருத்துகள் உனக்காகத் தெளிவாக விளக்கப்பட்டுக் காத்திருக்கின்றன! - எமர்சன்


By கோ.தமிழரசன்
dhinamani

  • எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் - - டாக்டர் அம்பேத்கர்.
  • தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் - - பகத்சிங்.
  • ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது வரும் முன் பணத் தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் - சார்லி சாப்ளின்
  • எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் -- - சேகுவாரா
  • ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம். - தோழர் சிங்காரவேலர்
  • வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும் சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு -- - சி.கே. செஸ்டர்டன்
  • புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது - -எலன் எக்ஸ்லே
  • உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும். - - வால்டேர்
  • ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருப வன் அதைவிடப் பெரிய முட்டாள் - -அரேபியப் பழமொழி
  • உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத் தில் உள்ளது. -- - கூகிவா திவாங்கோ
  • ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம்  அடையாளம் காணப்படுகிறது - - ஜார்ஜ் பெர்னாட்ஷா
  • போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங் களை வாசிக்கத் தேவைப்படுகிறது! - எல்பர்ட்கிரிக்ஸ்
  • புத்தகங்கள் இருந்தால்போதும் சிறைக் கம்பிகளும் கொட்டடிகளும் ஒரு வரை அடைத்து வைக்க முடியாது. - - மாவீரன் பகத்சிங்
  • ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது - - பிரடெரிக் எங்கெல்ஸ்
  • காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் - - எட்வின் பி. விப்பிள்
  • ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததி யினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் - புத்தகங்களே - ஹென்றிதொறோ
  • நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத் துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம் - - கரோலின் கோர்டன்
  • பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் - மார்டின் லூதர்கிங்
  • ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் - வின்ஸ்டன் சர்ச்சில்
  • ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித் தாராம் - - காந்தியார்
  • தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப் பட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச் சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார் - - நேரு
  • என் கல்லறையில் மறக்காமல் எழு துங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று - - பெட்ரண்ட்ரஸல்
  • மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று  வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார் - - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்
  • கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் - - தந்தை பெரியார்
  • வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் - நெல்சன் மண்டேலா றீ    பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
  • குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
  • பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம் - போவீ
  • புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கி றோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம் - - சீனப் பழமொழி
  • நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும்போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை. ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள். -- கிறிஸ்டோபர் மார்லே
  • புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம் - - சீனப் பழமொழி
  • ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை - ஆர்.டி. கம்மிஸ்
  • ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை - சார்லஸ் இலியட்
  • விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம் - அறிஞர் அண்ணா
  • ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியதுதான் - - டோனி மாரிஸன்
  • ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது; அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். - - ஆர்.டி. கம்மிங்
  • ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்லன் - - மார்க் ட்வைன்
  • உன் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக் குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள் - - ஜேம்ஸ்ரஸல்
தொகுப்பு: முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை


(2) என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். வாழ்நாள் முழுதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன்

 - மாஜினி




 பயன்படுத்தப்படாத புத்தகம் வெறும் காகிதக் கட்டுதான் - சீனப் பழமொழி




 நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்


 - ஆபிரகாம்லிங்கன்



அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி - ஜான்மெக்காலே

ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் - மார்க்ஸ் அரேலியஸ்

மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் - சீனப் பொன்மொழி

ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை - சிசரோ





நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை

- மாமேதை லெனின்






எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது - பிளாட்டோ.






"மனிதனைப் போலத்தான் புத்தக மும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”

மாக்சிம் கார்க்கி
 
 
(3)  நடமாடும் நூலகம்-திரு.முத்தையா செட்டியார் அவர்கள்-சென்னை.
                                    புத்தகங்களை நேசித்து அவற்றைச் சேமித்து எதிர்காலச் சந்ததியினருக்கு அவற்றை விட்டுச் செல்ல வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட மாமனிதர் திரு.முத்தையா செட்டியார் அவர்கள். ‘நடமாடும் நூலகம்’ என்று அழைக்கப்படும் ரோஜா முத்தையா தெற்காசியச் சமூகக் கலாச்சார வரலாற்றுப் பெட்டகத்தின் திறவுகோலை உலகிற்கு வழங்கிய மாமனிதர் ஆவார்.திரைகடல் ஓடித் திரவியம் தேடுவதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட நகரத்தார் வழியில், இராமநாதன் செட்டியார், அழகம்மை ஆச்சி ஆகியோருக்கு 1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் முத்தையா பிறந்தார். இளம் வயதிலேயே ஓவியம் தீட்டும் திறமை படைத்த முத்தையா சென்னை சென்று ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனம் ஒன்றை நடத்தினார்.
ஓவியங்கள் வரைவதற்காக முதலில் புத்தகங்களை வாங்கிய முத்தையா பிறகு புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டு அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊரான கோட்டையூருக்குச் செல்ல நேரிட்டபோது தனது நண்பர் ஒருவரிடம் தான் சேகரித்திருந்த புத்தகங்களைக் கொடுத்து பாதுகாத்து வைத்திருக்குமாறு கூறிச்சென்றார். சென்னைக்குத் திரும்பிய முத்தையா தனது நண்பர் அப்புத்தகங்களைத் தவறவிட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தார். மீண்டும் அந்தப் புத்தகங்களைச் சென்னையின் மூர் மார்க்கெட்டில் தேடித்தேடி வாங்கிச் சேகரித்தார்.அன்றிலிருந்து நூல்களைச் சேகரிப்பதையே தன் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார். ‘புத்தகங்கள் இல்லாத இல்லம் ஜன்னல்கள் இல்லாத வீட்டைப் போன்றது’ என்பது ஆங்கிலப் பழமொழி. ரோஜா முத்தையா தன் வீடு முழுவதும் புத்தகங்களை வாங்கிச் சேகரித்தார். புத்தகங்கள் தன் வீட்டை நிறைத்தபோது இரண்டு வீடுகளை வாடகைக்கு அமர்த்தி அதிலும் புத்தகங்களைச் சேகரித்து ஆராய்ச்சிக் கூடமாக்கினார்.
அரிய பணி:
புத்தகங்ளை வாங்குவதோடு நிறுத்திவிடாமல் அவற்றைப் படித்து, தலைப்பு வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தி, படிப்பவர்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றை அடுக்கி வைத்தார். ஒவ்வொரு நூலிலும் உள்ள செய்திகளைத் தொகுத்து களஞ்சியமும் தயாரித்தார். இது அவருடைய சொந்த முறையைத் தழுவியது. அரிய புத்தகங்களும் கலைப் பொருட்களும் எங்கே கிடைத்தாலும் அவற்றை எல்லாம் வாங்கிச் சேகரித்தார். கோட்டையூரிலிருந்து அருகிலுள்ள காரைக்குடிக்குப் பலமுறை வரும் முத்தையா ஊருக்குத் திரும்பிச் செல்வதற்காக வைத்திருக்கும் பேருந்துக் கட்டணத்தைக்கூட நூல்கள் வாங்குவதற்காகச் செலவிட்டு விட்டு நடந்தே கோட்டையூருக்குத் திரும்புவார்.
அழியாத சொத்து:
ரோஜா முத்தையா தன் வாழ்நாளில் சேகரித்த புத்தகங்கள் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகம். இவற்றில் பழமையான தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களும், மருத்துவம், தத்துவம், வரலாறு, இசை, நாடகம், கலைக் களஞ்சியத் தொகுப்புகள், நாட்டுப்புறப் பாடல்கள், அகராதிகள் ஆகியவையும் அடங்கும். இதைத்தவிர இரண்டு லட்சம் சிறுகதைகள், ஐந்து லட்சம் தினச்செய்தி துணுக்குகள், புத்தரைப் பற்றிய 2,000 கட்டுரைகள், வெள்ளையரால் தடை செய்யப்பட்ட புத்தகங்கள், விலங்குகள் தொடர்பான 5,000 கட்டுரைகள், 25,000க்கும் மேற்பட்ட சஞ்சிகைகள், 15 லட்சம் பழமொழிகள், செட்டிநாட்டு நகரத்தார் சமூகச் சடங்குகள் பற்றிய ஏடுகள், 750 மரச்சிற்பங்கள், விற்பனைப் பத்திரங்கள், அடகுச்சீட்டுகள், 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நாடக - திரைப்படத் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட ஏராளமான சேகரிப்புகளைக் கொண்ட அரிய பெட்டகமாக இந்த நூலகம் திகழ்கிறது.
அரிய சில நூல்கள்:
1705 இல் வெளியான சார்லஸ் டிரிலில் லோல்டின் ‘பியர்பதும் டெக்’ 1804- இல் வெளியான ‘கந்தர் அந்தாதி’ 1828-இல் வெளியான ‘போகர் வைத்திய நூல்வரிசை’ 1850- இல் வெளியான ‘மஸ்தான் பாடல்கள்’ 1857- இல் ஜி.யு. போப் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட ‘இலக்கண நூல்’ 1874- இல் வெளியான ‘தமிழ் ஒக்கபிலரி’ 1885- இல் உ.வே. சாமிநாதய்யர் முதன்முதலாகப் பதிப்பித்த ‘ஸ்ரீமத்தியார்ச்சுனமான்மியம்’1890-இல் வெளியான ‘நளச்சக்ரவர்த்தி’ போன்றவை இவர் சேகரித்துள்ள அரிய நூல்களுள் சிலவாகும்.
ஆவணங்களைத் தேடி...
ரோஜா முத்தையா சேகரித்த நூல்கள் பற்றிய செய்தியை அறிந்த ஆய்வாளர்கள் தம் ஆய்வு தொடர்பான தரவுகளைத் திரட்ட கோட்டையூருக்குச் சென்றனர். அவர்கள் நூலகத்தைப் பயன்படுத்த இலவசமாக அனுமதிக்கப்பட்டது. பிறகு ஆய்வாளர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் உதவித் தொகையில் ஒரு சிறுதொகையைப் பெற்று அதில் மதிய உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். முத்தையா அவர்கள் நினைத்திருந்தால் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கலாம். ஆனால், அரிய புத்தகங்களைப் பாதுகாப்பதே தனது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட்டார். அப்பணியிடையிலும் ‘தேள்கடி’ தொடர்பான மருத்துவநூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். சேகரித்த நூல்களைப் பாதுகாக்க ஒருவகைப் பூச்சி மருந்தைத் தெளித்து வந்தார். அதனை அடிக்கடி சுவாசிக்க நேர்ந்ததால் அவருக்கு நோய் ஏற்பட்டது. இந்நிலையில் தனது நூலகத்தைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்குக் கொடுக்க எண்ணினார். அதற்கான முயற்சிகளை அப்போதைய தமிழக அரசு மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சி ஏனோ வெற்றிபெறவில்லை.
சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சி.எஸ்.லட்சுமி என்பவர் தான் பயன்படுத்திய முத்தையா நூலகத்தின் சிறப்புகளைப் பற்றி தன் நண்பர்களிடமும் பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் எடுத்துக் கூறினார். பல்கலைக்கழக நிர்வாகம் முத்தையாவைத் தொடர்பு கொண்டு நூலகத்தைத் தருமாறு வேண்டியது. ஆனால் தான் அரும்பாடுபட்டுச் சேகரித்த அறிவுப் பெட்டகத்தை வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திற்கு அளிக்க அவர் விரும்பவில்லை. தனது சேகரிப்புகள் தமிழகத்திற்கே பயன்பட வேண்டும் என விரும்பினார். விருப்பம் நிறைவேறாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழறிஞர்களை அவர்கள் வாழும் காலத்தில் மதிக்காத தமிழகம் ரோஜா முத்தையாவின் நூலகத்தை அரசுடைமை ஆக்க எந்த முயற்சியும் எடுக்காத நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி தங்கள் வசப்படுத்தியது. இருப்பினும் சிகாகோ பல்கலைக்கழகம், மொழி, பண்பாட்டு அமைப்பான மொழி அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால் முத்தையா நினைவாக ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்’ என்ற பெயரில் சென்னை கிழக்கு முகப்பேரில் 1994 ஆம் ஆண்டு நிறுவி, இன்று சிறப்பாகச் செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி நூலகத்தின் நோக்கம்:
தமிழ் நூல்கள், இதழ்கள், நூல்சாராப் பிறவகை ஆவணங்களுக்கு இந்த நூலகம் ஓர் ஆவணக்காப்பகமாகச் செயலாற்ற வேண்டும் என்பது தான் இதன் தலையாய நோக்கமாகும். தனிச்சிறப்புகள் மொழிசார்ந்த பண்பாட்டு ஆய்வு நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகத் திகழ்கிறது. நூல் விவரங்களைத் தமிழிலேயே படிப்பதற்கான வகையில் கணிப்பொறி நூற்பட்டியலைக் கொண்ட முதல் நூலகமாக விளங்குகிறது. பிற இந்திய மொழியினரும் தமிழ் நூல்களின் விவரங்களை அவரவர் மொழியில் காணக்கூடிய வசதியும் உண்டு. இங்கு உள்ள நூல்களின் விவரங்களை உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்க வசதியாக 1996-ஆம் ஆண்டு முதல் இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்வரும் இணைய முகவரியில் விவரங்களைப் பார்க்கலாம். நூல்களும் ஆவணங்களும் நவீன அறிவியல் முறைகளின் மூலம் ஆவணக்காப்பு நுண்படமாக எடுக்கப்படுகின்றன. பலப்பல ஆண்டுகளுக்கு இவை அழியாமல் இருக்கும். நுண்படமாக எடுக்கப்பட்ட நூல்கள் கணினி குறுந்தட்டுகளின் வடிவிலும் வெளியிடப்படுகின்றன.இந்நூலகத்தில் இல்லாத நூல்களைத் தேடி அவற்றை நுண்படமாகச் சேகரிக்க ஒரு தனித்துறை இயங்குகிறது. இத்துறை தற்போது மாவட்டவாரியாகப் பழம்பெரும் சேகரிப்புகளைக் கண்டறியும் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

3 கருத்துகள்: