திங்கள், 13 ஜனவரி, 2014

சிலம்பக் கலை-தமிழரின் தற்காப்பு கலை.

மரியாதைக்குரியவர்களே,
                              வணக்கம்.
                                     தாளவாடி வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.தமிழர்களின் தற்காப்புக்கலைகளில் ஒன்று சிலம்பக்கலை.அதனை பற்றி சில விரங்களை இங்கு காண்போம்.
           SILAMA ASAAN  ANTHIYUR S.K.PONNUSWAMY.   SATHYAMANGALAM.
                                              சிலம்பக்கலை;
                 இந்த கலையானது தமிழர்களின் தற்காப்பு கலைகளில் சிறப்பானது ஆகும்.சிலம்பக்கலையில்,சுவடுகள்,பிடிமுறைகள்,ஆயுதப் பிரயோகம்,பூட்டு பிரிவுகள்,ஒழிவு முறைகள்,நொடிப்பொழுதில் அடித்து வீழ்த்தும் வர்ம அடிமுறைகள் என எண்ணற்ற பிரிவுகளை கொண்டது.
                   இதில் நெடுங்கம்பால் தாக்குதல்,சுழற்றி அடிக்கும் தாக்குதலிலிருந்து காத்துக்கொள்ளுதல் போன்ற நுணுக்கங்கள் உள்ளன.
                 ஆரம்பக்கால்கள் பன்னிரண்டு,சுவடு வைத்து,ஏற்றம் இறக்கம்,பிரிவு ஒழிவு காட்டுதல் போன்றவையுடன் வீடு கட்டுதல் ஆகியவை உண்டு.அதாவது அறுபத்திநான்கு சுவடு வைத்து விளையாடுவது வீடு கட்டுதல் முறையாகும்.
   நிலைகள் பன்னிரண்டு,கட்டு பன்னிரண்டு,கம்பு ஒன்பது.
             நான்கு மிதியிலிருந்து ஒன்பது வரிசைகளையும் ஏமாற்றம் செய்யும் கம்புகளையும்,ஆரம்ப பன்னிரண்டு கால்களையும்,,பன்னிரண்டு நிலைகளையும்,பன்னிரண்டு கட்டுகளையும்,எதிரியின் அசைவைக் கொண்டு நிலைப்படுத்தும் பன்னிரண்டு கலங்களையும் கற்றுணர்ந்தவன்தான் சிலம்பவீரனாக முடியும்.
                    உடலை வருத்தாமல் கடின உடற்பயிற்சியின்றி எளிய முறையில் பயிற்சி பெற்றாலே எதிரிகளை நொடிப்பொழுதில் தொட்டுத்தாக்கி வீழ்த்த முடியும்.பொதுவாக,நம் முன்னோர்கள்  வகுத்துக்கொடுத்த வர்மங்கள் நூற்றியெட்டு என்றும்,இதனை படு வர்மம் பன்னிரண்டு என்றும் தொடு வர்மம் தொண்ணூற்றிஆறு என்றும் வகுத்துள்ளனர்.இதில் எதிரிகளை தொட்டு வீழ்த்தக் கூடிய வர்ம இடங்களை தட்டு வர்மம் எட்டு என்றும் பிரித்து தெரியப்படுத்தி உள்ளனர்.
                 உடலில் உள்ள நூற்றியெட்டு வர்மங்களுமே  மிகவும் ஆபத்தானவைதாங்க.
                   இதில் குறிப்பிட்ட வர்ம இடங்களில் தாக்குதல் ஏற்படும்போது அதன் வேகத்தாலும்,அதன் அளவினாலும் அதனால் உண்டாகும் ஆபத்துகளை பொறுத்து அசாத்திய இடங்கள் இருபத்தெட்டு என்றும்,மரணத்தை உண்டாக்கும் இடங்கள் பதினெட்டு என்றும் தெளிவாக வர்ம நூல்களில் காணலாம்.
                  வர்ம பாதிப்புகளிலிருந்து பரிகாரம் செய்வதற்காக பாதிப்புகளை மூன்றுவிதமாக வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.அதாவது வாத வர்மம்,பித்த வர்மம்,கப வர்மம்.அதற்கான பரிகாரமாகிய அடங்கல் செய்து அதற்குரிய மருந்து கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளலாம்.

                   சத்தியமங்கலத்தில் சிலம்ப ஆசான் அந்தியூர் S.K.பொன்னுசாமி அவர்கள் சிலம்ப பயிற்சி கொடுத்து வருகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக