ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்-தாளவாடி

மரியாதைக்குரியவர்களே,
                                   வணக்கம்.

                ''தாளவாடி'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்-கோவை கோட்டம்,ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளையில் சாலை பாதுகாப்பு வாரவிழா தொடங்கியது.தாளவாடி கிளையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவிற்கான கருப்பொருளுடன் பேனர் கட்டப்பட்டுள்ளது..போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் சாலை பாதுகாப்பிற்கான பேட்ஜ் அணிந்து பணி புரிகின்றனர்.ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாள் தொடங்கும் சாலை பாதுகாப்பு வாரவிழா இந்த வருடம் ஜனவரி மாதம் 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த தேதி மாற்றம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஐயத்திற்குரியதாக இருக்கும்.காரணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கத்தான் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.ஆனால் இடையே பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் வருவதால் விழிப்புணர்வு என்பது சற்று தாழ்ந்து விளம்பரம் என்ற அளவிற்குத்தான் இருக்கும்.கண்டிப்பாக இந்த அரசு மறு பரிசீலனை செய்து வேறு தேதிக்கு மாற்றம் செய்தால்தான்  நல்லது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக