ஞாயிறு, 8 மார்ச், 2015

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். கதிர் தொண்டு நிறுவனத்தை வாழ்த்தலாம் வாங்க...

700 ரூபாய் இருந்தால் தனி­யாக உணவ­கம் தயார்

சென்­னையில் வெறும் 700 ரூபாய் முத­லீட்­டுடன், பெண்­களை சிறிய தொழில் முனை­வோ­ராக மாற்றி வரு­கி­றது ‘கதிர்’ சாலை­யோர உண­வ­கங்கள். மருத்­துவ துறை ஆராய்ச்­சியில் ஈடு­பட்டு வரும் ஒரு தொண்டு நிறு­வனம், பெண்­களின் பொரு­ளா­தார முன்­னேற்­றத்­திற்­காக ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்­டத்தில், ‘கதிர்’ என்ற வர்த்­தக பெய­ருடன் மொத்­த­மாக உணவை சமைத்து, அதை பொரு­ளா­தார ரீதி­யாக பின்­தங்­கிய பெண்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்­களை சேர்ந்த பெண்­க­ளுக்கு உற்­பத்தி விலை­யி­லேயே தரு­கி­றது. அதை பெண்கள், சாலை­யோர உண­வ­கங்கள் மூல­மாக  விற்­பனை செய்­கின்­றனர்.

அதி­க­பட்சம் 700 ரூபாய் இருந்தால், பெண்கள் இது போன்ற உண­வ­கத்தை அமைத்து கொள்­ளலாம் என்­கிறார் அந்த அமைப்பின் ‘எக்கோ கிச்சன்’ திட்ட மேலாளர் கணேஷ்.இந்த திட்டம் பெண்­களை பொரு­ளா­தார ரீதி­யாக தன்­னி­றைவை உரு­வாக்­கு­வ­துடன், குடும்­பங்­களில் முடி­வெ­டுப்­பதில், பெண்­களின் பங்­கேற்பை அதி­க­ரிப்­பது, குடும்ப வன்­மு­றையை எதிர்­கொள்­வது, குழந்­தைகள் வளர்ப்பு என, மொத்­த­மா­கவே பெண்­களை இந்த திட்டம் மேம்­ப­டுத்­தி­யுள்­ளது என்­கிறார் ‘எக்கோ கிச்சன்’ மேலாளர் சேது­லட்­சுமி.
பொருளாதார சுதந்திரம்இது­கு­றித்து சேது­லட்­சுமி கூறி­ய­தா­வது:எய்ட்ஸ் விழிப்­பு­ணர்­வுக்­காக சென்­னையில் உள்ள பல்­வேறு குடிசை பகு­தி­க­ளுக்கு ஆய்­விற்கு சென்ற போது, பொது சுகா­தாரம் மற்றும் உடல் ஆரோக்­கியம் ஆகி­யவை பெண்­களின் பொரு­ளா­தா­ரத்­துடன் தொடர்­பு­டை­ய­தாக இருந்­ததை கண்டோம்.பெண்கள் அதிக அளவில் உடல் ரீதி­யான வன்­முறை, வார்த்தை அள­வி­லான வன்­மு­றையை தின­சரி எதிர்­கொள்­கின்­றனர்.
குழந்­தைகள் வளர்ப்பில் போதிய விழிப்­பு­ணர்வு இல்­லாமல் இருந்­தனர். ஆரோக்­கி­ய­மான உடல் நிலை அடைய, ஊட்­டச்­சத்து குறை­பாடு இல்­லாமல் இருக்க வேண்டும். அதற்கு பெண்­க­ளுக்கு பொருளாதார ரீதி­யான சுதந்திரம் அவ­சி­ய­மா­கி­றது. பெண்கள் தின­சரி ஈடு­படும் பணி­களை ஆய்வு செய்தோம். அதில் பெண்கள் உண­வ­கங்கள் அமைத்து அவற்றை விற்­பனை செய்­வது இயல்­பாக இருக்கும் என, நினைத்தோம்.அந்த அடிப்­ப­டையில் உரு­வா­னது தான் ‘எக்கோ கிச்சன்’ எனும் திட்டம். இந்த திட்டம் 2007ல் சிறிய அளவில் செய்து வந்தோம். பின், அதை 
2010ல் விரி­வு­ப­டுத்தி, 3 ஆண்டு­க­ளாக நடத்தி வரு­கிறோம்.இவ்­வாறு சேது­லட்சுமி தெரி­வித்தார்.
மேலும், அவர் கூறு­கையில், கதிர் சைவ உண­வகம் என்­கிற பெயரில் சாலை­யோ­ரங்­களில் உண­வ­கங்கள் அமைக்க தேவை­யான இரும்பு தகட்­டினால் ஆன கடை போன்ற அமைப்பு, அமரும் நாற்­கா­லிகள், உணவை கொண்டு செல்­வ­தற்­கான பாத்­தி­ரங்கள் ஆகி­ய­வற்றை நாங்­களே தருவோம். 
ஒரு சாப்­பாட்­டிற்கு தின­சரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்­க­ளுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்­பாடு விற்றால், 35 ரூபாய் எங்­க­ளுக்கு வாடகை தர­வேண்டும். அது அந்த பொருள்­களின் மீது அவர்­க­ளுக்கு பொறுப்பு வரு­வ­தற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கிறது. உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தற்­கான செலவை மட்­டுமே பெண்­க­ளிடம் இருந்து வசூலிக்­கிறோம், என்றார் கணேஷ் கூறு­கையில்,‘‘இந்த திட்­டத்தில் எந்த பகுதி யில் உள்ள பெண்­களும் சேரலாம். உணவை நாங்கள் வழங்க வேண்­டு­ மென்றால், அதற்­கான பணத்தை அவர்கள் ஒரு நாளைக்கு முன்பே வழங்க வேண்டும். உணவை சமைத்து விட்டு வாங்­க­வில்­லை­என்றால் கெட்­டு­விடும். 
அதா­வது குறைந்­த­பட்சம் 35 சாப்­பாடு என்றால், 700 ரூபாய் வரை எங்­க­ளுக்கு அளிக்க வேண்டும். மறு நாள் மதியத்திற்குள் உணவு தயாரிக்கப்­பட்டு, அவர்கள் இருக்கும் இடத்­திற்கே கொண்டு போய் கொடுத்து விடுவோம். பின் நாங்­களே பாத்­தி­ரங்களை வாங்கி கொண்டு வந்து விடுவோம். பெண்கள் அதை விற்­பனை செய்து கொள்ள வேண்டும்,என்றார் இந்த திட்டம் மிக எளி­மை­யாக இருந்­தாலும், சாலை­யோ­ரங்­களில் இந்த உண­வ­கங்கள் நடத்­து­வதில் பல்­வேறு சவால்­களை சந்­திக்க வேண்­டி­யி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். குறிப்­பாக மழைக்­கா­லங்­களில், ஒருநாள் உணவு மீத­மாகி நஷ்டம் ஏற்­பட்­டாலும், ஒரு வாரத்­திற்கு அந்த பகு தியில் இருந்து உணவை வாங்க வர­மாட்­டார்கள். அது­மட்­டு­மில்­லாமல், உள்ளூர் அர­சி­யல்­வா­திகள், அதி­கா­ரிகள், கடைக்கு வருவோர் பல­ரையும் சமா­ளிப்­பது ஒரு சவா­லான காரியம் என்­கின்­றனர்.
சமூக மாற்றம்
சேது­லட்­சுமி கூறு­கையில், சென்­னையில் மொத்தம் 63 இடங்­களில், சாலை­யோர கடைகள் உள்­ளன. இ.சி.ஆர்., கிண்டி, ஆழ்­வார்­பேட்டை, மடிப்­பாக்கம் உள்­ளிட்ட இடங்­களில் உள்­ளன. இந்த கடைகள் சாலை­யோ­ரங்­களில் அமைந்­துள்­ளதால், முதலில் உண­வகம் அமைக்க, அந்­தந்த பகுதி மாந­க­ராட்சி மற்றும் காவல் ­நி­லைய அதி­கா­ரி­களை சந்­திப்போம். ‘‘இந்த திட்­டத்­திற்கு இதுநாள் வரை அனை­வரும் உதவி செய்தே வந்­துள்­ளனர். அங்கு வரும் பிரச்­னை­க­ளுக்கு ஏற்ப அரசு அதி­கா­ரி­களின் உத­வியை நாடுவோம். பின், பெண்­களே தனி­யாக அந்த கடையை நடத்தி கொள்ள வேண்டும், என்றார் இந்த திட்டம் வெறும் வேலை­வாய்ப்பு என்­றில்­லாமல், சாதா­ரண குடும்­பத்து பெண்­களை, ஐ.டி., நிறு­வ­னங்­களின் உண­வ­கங்­களில் பணி­யாற்­றவும் வாய்ப்­ப­ளிக்­கி­றது. நாள் ­ஒன்றுக்கு 7,000 சாப்­பாடு தயா­ரிக்­கப்­ப­டு­கின்றன. இதில் 3,000 முதல் 3,500 வரை சாலை­யோர கடை­க­ளுக்கும், மீதம் ஐ.டி., நிறு­வன 
உண­வ­கங்­க­ளுக்கும் வழங்­கப்­ப­டு­கின்­றன. இந்த திட்­டத்­திற்கு மேலும் பல­ரது ஆதரவு கிடைத்தால், இது சமூ­கத்தில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்­கிறார் கணேஷ்.இறு­தி­யாக சேது­லட்­சுமி கூறு­கையில், ‘‘இந்த உண­வகம் வெறு­மனே, பெண்­க­ளுக்­கான பொரு­ளா­தார சுதந்­திரம் என்­ப­தையும் தாண்டி, குடும்­பங்­களில் முடி­வு­களை எடுக்கும் இடத்­திற்கு பெண்­களை முன் னேற்றும். குழந்­தைகள் வளர்ப்பு குறித்த விழிப்­பு­ணர் வையும் ஏற்படுத்தும்,’’ என்றார்.ஒரு சாப்­பாட்­டிற்கு தின­சரி ௧ ரூபாய் வாடகை மட்டும் எங்­க­ளுக்கு அவர்கள் தர வேண்டும். 35 சாப்­பாடு விற்றால், 35 ரூபாய் எங்­க­ளுக்கு வாடகை தர­வேண்டும். அது அந்த பொருள்­களின் மீது 
அவர்­க­ளுக்கு பொறுப்பு வரு­வ­தற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கிறது

ராகிக்களி செய்வது கற்றுக்கொள்ளுங்க..


மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். தாளவாடி மக்கள் மன்றத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன். ராகிக்களி செய்வது பற்றி இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – 1 கப்
உப்பு – ½ தேக்கரண்டி
தண்ணீர் – 4 கப்
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் 3 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
மாவை 1 கப் தண்ணீரில் கரைத்து , கொதிக்கும் நீரில் ஊற்றவும்.
மிதமான தீயில் கட்டியில்லாமல் மரக்கரண்டியால் கிளறிவிடவும்.
நன்று வெந்து திரண்டு வரும் பொழுது, அடுப்பை அணைத்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
குறிப்பு:களி வெந்த பதம் அறியும் முறை ; 
  கரண்டியில் எடுத்து விட்டால் உடனே விழாது.கையை நீரில் நனைத்து கலியை உருட்டினால் நன்கு ஒட்டாமல் உருட்ட வரும்.
இதனை சூடாக கீரை மசியல் (அ) தக்காளி கத்தரிக்காய் மசியல் (அ) கருவாடு கத்தரிக்காய் குழம்புடன் சூடாக பறிமாறவும்.
ஆறியபின் கையில் தண்ணீர் நனைத்து உருட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தயிர் மோருடனும் சாப்பிடலாம்.
     வேறுமுறை:தண்ணீர் கொதிக்கும் பொழுது , மாவை கரைக்காமல் அப்படியே போடவும், மிதமான தீயில் வைத்து, 2 நிமிடத்திற்கு பின் கட்டியிலாமல் ஒரு மரக்கரண்டியால் கிளறவும்.
நன்று வெந்து திரண்டு வரும் பொழுது, அடுப்பை அணைத்து 2 நிமிடம் மூடி வைக்கவும்.
குறிப்பு:பதம் அரிய , கரண்டியில் எடுத்து விட்டால் உடனே விழாது. கையை நீரில் நனைத்து கலியை உருட்டினால் நன்கு ஒட்டாமல் உருட்ட வரும்

ராகிக்களி செய்யும் முறை

மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.தாளவாடி மக்கள் மன்றத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். 
            இன்று எளிமையாக ராகிக்களி செய்வது பற்றி பார்ப்போம் வாங்க.
          தேவையான பொருட்கள்
 ராகிமாவு -100 கிராம்,
குருணை அரிசி என்னும் நொய் (பாதி அரிசி) - 50 கிராம், 
உப்பு - தேவைக்கேற்ப, 
வெங்காயம் -1, 
பச்சை மிளகாய் -1, 
தண்ணீர் -50 மில்லி, 
எண்ணெய் -2 டீஸ்பூன். 
. செய்முறை 
          ராகிமாவை தனியாக தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு  எடுத்து வைத்துக் கொள்ளவும். 
   நொய்யை அதாங்க குருணை அரிசியை  ப்ரஷர் குக்கரில் வைத்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக வேக்காடு போடவும். 
 வெந்த அரிசிக்குருணையை அப்படியே ஏற்கனவே கரைத்து வைத்துள்ள ராகி மாவுடன் ஊற்றி ஊற்றி `திக்' ஆகும் வரை கிளறவும். அவ்வளவுதாங்க. ராகி களி   ரெடியாகிவிடும்.  வெங்காயம், பச்சைமிளகாயைத் தொட்டுக் கொண்டு சுவையாய் சாப்பிடலாம்.  பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரையைக் கலந்தும் சாப்பிடலாம்.குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ராகிக்களி செய்யலாம் வாங்க.


மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.ராகி களி செய்யலாம் வாங்க...

   ‘சிறுதானிய வகைகளில் அரசன்’ இந்த கேழ்வரகு என்றழைக்கப்படும் ராகியே.  நீரிழிவுக்கான சிறப்பு உணவு முறையில் ராகிக்கு முதலிடம் உண்டு. எனினும், கஞ்சியோ கூழோ - எளிதில் ஜீரணமாகும் எதுவும் நீரிழிவுக்கு எதிரி என்பதால், ராகியை அடையாகவோ, தோசையாகவோ, சாதமாகவே எடுத்துக் கொள்ளலாம். ராகி அல்வாவில் தொடங்கி ஏகப்பட்ட அயிட்டங்கள் இதில் இருந்தாலும், செய்ய எளிதானதும் செலவில்லாததும் என்ற பெருமையைப் பெறுவது ராகி களியே.

        எதனோடும் இதை ஜோடி சேர்க்கலாம், தொய்யல் கீரை, காட்டுக் கீரை கடைசல், கொள்ளுக் குழம்பு, பாசிப்பயறு குழம்பு, கத்தரிக்காய் - மொச்சைக் குழம்பு என எல்லாமே நன்று.  அசைவத்தில், கோழிக்குழம்பும் ராகி களியும் மாப்பிள்ளை விருந்து பட்டியலிலும் இடம் பெறும். கருவாட்டுக் குழம்பும் களியும் நினைப்பவர்களையும் ருசிக்கத் தூண்டும்.  இது எதுவுமே இல்லாமல், வெறுமனே மோரில் கலந்து கூழாகக் குடித்தால் வெயிலுக்கு இதத்தை  அனுபவிக்க முடியும். குழந்தைகளுக்கு சூடான களியில் நெய்யும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துத் தரலாம். அனைத்துச் சத்தும் அதில் அடங்கும்.பச்சை இலையில் நல்ல மெருன் நிற களியை வைக்கும் போதே, அதன் சேர்க்கை என்ன என்று ஆவலாக கேட்பவர்கள் அதிகம். உணவு
கண்ணுக்கும் ருசிக்க வேண்டுமே!

இத்தனை பெருமையுள்ள களியை பாரம்பரிய முறையில் செய்வோமா! களி செய்ய மண்சட்டியே சாலச் சிறந்தது. இல்லாவிட்டால், வாய் குறுகிய அடி கனமான சட்டி. தண்ணீரை கொதிக்க வைத்து மாவை விட்டு கை விடாமல் கிளற வேண்டும்... அவ்வளவே.  இதில் சில நுணுக்கங்களை பின்பற்றினால் களி என்பது எத்தனை எளிதான சுவை உணவு என்பது புரியும்!
இதோ படிப்படியான களி செய்முறை...

என்னென்ன தேவை?
ராகி மாவு - ஒரு கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிநிலைக்கு விடவும் (அதிகம் கொதிக்க விட வேண்டாம்). எண்ணெயும் உப்பும் சேர்க்கவும். ராகிமாவை தூவி நன்றாக கைவிடாமல்  கிளறவும் (தீயை நடுத்தரமாக வைக்கவும்). பாத்திரத்தை கீழே எடுத்து கடைசல் செய்வது போல மத்தில் நன்கு கிளறிவிடவும். இப்படி  செய்வதால் கட்டி தட்டாமலும் சீராகவும் வேகும். தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சின்ன தீயில் 10 நிமிடம் வேகவிடவும். கையில் தண்ணீர் தொட்டு ராகியை தொட்டால் ஒட்டாமல் வருவது களி வெந்ததற்கு நல்ல பதம். அடுப்பில் இருந்து அகற்றி ஆறியதும் உருண்டை பிடிக்கவும். சூடாக குழம்புடனோ, ஆறிய பின் மோருடனோ பரிமாறவும்.

உங்கள் கவனத்துக்கு...

ராகி மாவை தண்ணீரில் போட்டதும் கட்டி தட்டும், அதனை தவிர்க்க மாவை கெட்டியாக சிறிது தண்ணீரில் கரைத்தும் ஊற்றலாம். கர்நாடக முறையில் ரவை அல்லது சாதம் சேர்த்தும் செய்யலாம். ரவை சேர்ப்பதானால் தண்ணீர் கொதித்ததும் ரவை சேர்த்து, பின் தனியாக மாவை சேர்க்க வேண்டும். சாதம் சேர்ப்பதானால் மாவுடன் சாதம் கலந்து சேர்க்க வேண்டும்.  களி கிளற என்றே சீ வடிவ மரத் துடுப்புகள் உண்டு. முடிந்தால் அதை உபயோகிக்கவும். அல்லது மரகரண்டி, பருப்பு மத்து போன்றவையே போதும்.





கேழ்வரகு – ராகிக் களி

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.கேழ்வரகு என்னும் ராகிக்களி செய்யும் முறை பற்றி காண்போம்
       
தேவையான பொருட்கள் :

4 டம்ளர்  தண்ணீர்
2 டம்ளர் கேள்வரகு – ராகி மாவு

 
செய்முறை:
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.
பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.களி சூடாக உண்டால் ருசி அதிகம்.
              மாவு கட்டி கட்டாமல் கிளற தெரியாதென்றால் , மாவு போட்டு கிளறும் முன் கொஞ்சம் பழைய சாதம் அல்லது சம்பா ரவையை சேர்த்துக் கொள்ளலாம் – மாவு கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.
           அல்லது மாவை சுடுதண்ணீரில் போட்டு பிசைந்து பிறகு பாத்திரத்தில் கொதித்த தண்ணீருடன் சேர்த்தும் கிளறலாம்.
ஒரு டம்ளர் என்பது 225மில்லி கொள்ளளவு என்பதை அறியவும்.

உடனடி இட்லிப்பொடி செய்து பாருங்க...

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம். இட்லிப்பொடி எளிமையான முறையில்  செய்வது பற்றி காண்போம்.
தேவையானவை:
சாம்பார் மிளகாய்த்தூள் _ கொஞ்சம்
முழு பூண்டு _ 1
உப்பு _ சுவைக்கு

செய்முறை:
தோலை உரிக்காமல் பூண்டிதழ்களை பிரித்தெடுத்து வைக்கவும்.
பிறகு மிளகாய்த்தூள் & பூண்டு & உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நுணுக்கி அல்லது தட்டிக் கொள்ளவும்.
கண்டிப்பாக அரைக்கக்கூடாது. மிக்ஸியிலும் போட‌க் கூடாது. இட்லி, தோசை, ஊத்தப்பம் என எல்லாவற்றிற்கும் சூப்பரா இருக்கும்.
ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். அதற்குமேலும் வைத்தாலும் காய்ந்துவிடுமே தவிர  கெட்டுப்போகாது. தேவைக்கேற்ப ஒரு நாளைக்குத் தேவையானதை மட்டும் செய்யலாம். .
பொருமாதிரியாக காரல் அடிக்கும் என்ற பயமே தேவையில்லைங்க.  சாப்பிடப்போகும் ஒவ்வொரு இட்லி துண்டிலும் மிளகாய்த்தூளுடன் சிறிது பூண்டும் இருக்கிற மாதிரி சாப்பிட சுவை மிகுதியாக இருக்கும்.
நல்லெண்ணெய் போட்டுக் கலந்தும் சாப்பிடுவார்கள்.

இட்லிப்பொடி-

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.இட்லிப்பொடி செய்வது பற்றி காண்போம்.
தேவையான  பொருள்கள்:
கடலைப் பருப்பு_ஒரு கப்
கறுப்பு உளுந்து_ஒரு கப்
காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப)
மிளகு_1/4 டீஸ்பூன்
சீரகம்_1/2 டீஸ்பூன்
பெருங்காயம்_சிறிது
கறிவேப்பிலை_ஒரு கொத்து
பூண்டு_2 பற்கள்
உப்பு_தேவைக்கு

செய்முறை:
உப்பு தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் வெறும் வாணலியில் மிதமானத் தீயில் வறுத்து ஆற வைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக இடித்துக்கொள்ள வேண்டும்.
கடலைப் பருப்பு,உளுந்து இரண்டையும் சிவக்க வறுக்க வேண்டும்.
மிளகாய் நிறம் மாறாமல் வறுக்க வேண்டும்.இதனை பருப்புகள் வறுக்கும்போது போட்டு சூடேறியதும் எடுத்துவிடலாம்.
மிளகு,சீரகம் சூடுவர வறுக்க வேண்டும்.
காய்ந்த கறிவேப்பிலையாக இருந்தால் லேசாக சூடேறினால் போதும். பச்சையாக இருந்தால் சருகு போல் வரும்வரை வறுக்க வேண்டும்.
பூண்டைப் பொடியாக நறுக்கி நன்றாக வதங்கும் வரை வறுக்க வேண்டும்.
கட்டிப் பெருங்காயமாக இருந்தால் பருப்பு வகைகள் வறுக்கும்போது அதிலேயே சேர்த்து வறுத்துக்கொள்ளலாம்.தூள் பெருங்காயமாக இருந்தால் பொடி இடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.
இட்லி,தோசை இவற்றிற்கு வெறும் தூளோ அல்லது தூளுடன் நல்லெண்ணெய் சேர்த்தோ சாப்பிட சுவையாக இருக்கும்.

சனி, 7 மார்ச், 2015

காபி பற்றிய தகவல்...

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 
பில்டர் காபி
நான் ஒரு காபி உபாசஹன். என் முன்னோரும் அப்படித்தான். பின்னே.....!தஞ்சை மண்ணில் பிறந்து விட்டு காபி வெறியனாக இல்லாவிட்டால் எப்படி? காலையில் விழிப்பதே காபி முகத்தில் தான். அப்புறம்... வீட்டிற்கு நண்பரோ உறவினரோ வந்தால் காபி உபசரிப்பு. கூடவே நமக்கும் ஒரு கப். வேலை பளு அதிகமா?குடி காபியை. வேலையே இல்லாமல் போர் அடிக்கிறதா? அதற்கும் காபியே மருந்து. You just need an excuse to have a Cuppa!
உலகத்தில், பல நூறு வகை காபி தயாரிக்கப் பட்டாலும் நம்ம ஊரின் filter coffeeக்கு முன்னால் நிற்க கூட எந்த காபிக்கும் தைரியம் கிடையாது. பிராமணர்களின் வீடுகளில், காபி தயாரிப்பு என்பது தினசரி ஒரு தவம் போல் செய்யப் படும். இதற்கென எழுதப் படாத விதிகள் உண்டு. இதை முழுக்க அறிய வேண்டும் என்றால், காலச் சக்கரத்தில் சற்றே பின்னோக்கி போக வேண்டும். போவோமா?

பிரிக்கப் படாத தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர் அது. மதியம் மணி மூன்று இருக்கும். அந்த ஊரின் அக்ரஹாரத்தில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே செல்கிறோம். பித்தளை டப்பாவில் உள்ள பச்சை காபி கொட்டையை எடுத்து, விறகு அடுப்பின் மேல் உள்ள மண் வாணாயில் போட்டு வறுக்கிறாள் அந்த வீட்டின் தலைவி. இப்போது என்ன கேட்டாலும் பதில் கிடைக்காது. பதம் தப்பாமல் வறுக்க வேண்டுமே? காபி கொட்டை பொன்னிறம் வரும் வரை வறுக்க வேண்டும். ஆனால் கருகி விடக் கூடாது. கொட்டையிலிருந்து எண்ணெய் லேசாக கசிய தொடங்கும் நேரத்தில் தான் கவனம் தேவை. அதன் பின் எப்போது வறுப்பதை நிறுத்த வேண்டும் என்பது நம் ருசிக்கேற்ப அமையும். பின் வறுத்த கொட்டைகளை மூங்கில் முறத்தில் போட்டு சற்று காற்றாட ஆற விடுகிறார். காபி மணம் மூக்கை துளைக்கிறது. வறுத்த காபி கொட்டையின் வாசனையே நமக்கு புத்துணர்ச்சி தருகிறது. அடடா... காபி வாசனையில் மெய் மறந்ததால் அந்த பெண் எழுந்து சென்றதை கவனிக்கவில்லை.
காபி பில்டர் கீழ் பகுதி
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டின் கொல்லை புறத்தில் ஒரு மாட்டுக் கொட்டகை தெரிகிறது. உள்ளே இரண்டு காராம் பசுக்கள் வாயை அசை போட்டுக் கொண்டிருக்கின்றன. தினசரி பால் தேவைக்காக இந்த மாடுகள் வளர்க்கப் படுகின்றன. ஒரு மாட்டின் பால் வற்றி விட்டால் என்ன செய்வது?. அதற்காக தான் இரண்டு மாடுகள். இதோ அந்த பெண் கையில் ஒரு லோட்டாவுடன் வருகிறாள். காபி கொட்டை ஆறுவதற்குள் பால் கறக்கப் படுகிறது. இளம் சூடான புத்தம் புதிய பால். பசும் பால் தான் காபிக்கு ஏற்றது. அதுவும் அப்போது கறக்கப் பட்ட பால் தான் வேண்டும்.
காபி பில்டர் மேல் பகுதி
பால் உள்ளே செல்கிறது. இப்போது காபி கொட்டை ஆறி விட்டது. கையால் சுற்றி காபி அறைக்கும் மெஷினில் போட்டு அறைக்கிறாள். ரொம்ப நைஸ் ஆகவும் அறைக்கக் கூடாது. காபியில் கசப்பு கூடி விடும். அதிக கொர கொரப்பாகவும் அறைக்க்க் கூடாது. லேசான கொர கொரப்பு. அது தான் filter coffeeக்கு சரியான பக்குவம்.
காபி பொடி
இப்போது காபி பில்டரின் மேல் பகுதியில் பொடி போடப் படுகிறது. நாம் உன்னிப்பாக கவனிக்கிறோம். பில்டரில் போட்ட காபி பொடியில் விரல்களால் மெதுவாக அழுத்தம் கொடுக்கிறார். இல்லை என்றால் பொடியின் மேல் கொட்டும் வெந்நீர் கொட கொட வென்று கீழே இறங்கி விடும். ரொம்ப அழுத்தி விட்டால் வெந்நீர் கீழே இறங்கவே இறங்காது. பழகிய விரல்களுக்கு பக்குவம் தெரியும். 40 கிராம் காபி பொடிக்கு 60 m.l. தண்ணீர் தேவைப் படும். இரண்டு கப் காபி (120 m.l. each) கிடைக்கும். ஒரு கப் காபிக்கு 30 m.l. டிகாக்க்ஷன், 90 m.l. பால் தேவைப் படும்.
காபி பில்டர்
பில்டரில் ஊற்ற வெந்நீர் ரெடியாகிறது. அட சுடு தண்ணீர் தானே என்று அலட்சியம் வேண்டாம். 92 டிகிரி தான் காபிக்கான தண்ணீரின் சரியான கொதி நிலை. தண்ணி தான் கொதித்து விட்டதே என்று அவசரப் படக் கூடாது. அடுப்பை அணைத்து, தல புல வென்று கொதிக்கும் தண்ணீரின் சத்தம் சற்றே அடங்கியவுடன், தண்ணீரை காபி பில்டரின் மேல் பாகத்தில் மெதுவாக விட வேண்டும்.
கறந்த பாலை அடுப்பில் ஏற்றுகிறாள் அந்த பெண். பாலை காய்ச்சி, டபரா டம்ளர்களை ரெடி செய்து முடிக்கிற போது அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கிறது. கொட்டக் கூழாக டிகாக்க்ஷன் இறங்கி இருக்கிறது.

இனி என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் விதிகள் உண்டு. டம்ளரில் முதலில் சக்கரையை போட வேண்டும். எவ்வளவு சக்கரை என்பது உங்கள் விருப்பம். ஆனால் ஒன்று. சக்கரை கம்மியாக இருப்பது தான் காபிக்கு நாம் செய்யும் மரியாதை. அப்போது தான் காபியின் அந்த ரம்மியமான மென் கசப்பை அனுபவிக்க முடியும். சக்கரையின் மீது டிகாக்க்ஷனை ஊற்ற வேண்டும். டிகாக்க்ஷன் அளவும் உங்கள் விருப்பம் தான். ஆனால், டிகாக்க்ஷன் சற்று தூக்கலாக இருப்பது தான் நல்ல காபியின் இலக்கணம். இப்போது பால் சேர்க்க வேண்டும். நாம் விரும்பிய நிறம் வந்தவுடன் பால் சேர்ப்பதை நிறுத்தி விடலாம்.
இதோ வெள்ளி டபரா டம்ளரில் காபி திண்ணையில் இருக்கும் குடும்ப தலைவருக்கு கொடுக்கப் படுகிறது. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். வெள்ளி அல்லது பித்தளை பாத்திரம் தான் காபிக்கு உகந்தது. அதிக நேரம் சூடு தாங்கும். சுவையில் கூட சிறிது வித்தியாசம் தெரியும். அவர் காபி குடிக்கும் அழகை சற்று ரசியுங்களேன். லேசா ஒன்றிரண்டு முறை ஆற்றி விட்டு, தோளில் போட்டிருக்கும் துண்டால் டம்ளரின் கீழே பிடித்துக் கொள்கிறார். கை பொறுக்காத சூட்டை வாய் பொறுக்கிறது. அமிர்த திரவம் சொட்டு சொட்டாக உள்ளே செல்கிறது. சூட்டோடு சாப்பிடும் காபிக்கு தான் சுவை அதிகம். காபியை ஆற வைப்பது காபிக்கு நாம் செய்யும் அவமரியாதை.
சிலர் ஒரு டம்ளர் காபியோடு நிறுத்திக் கொள்வார்கள். சிலருக்கு ஒரு சொம்பு காபி குடித்தாலும் போதாது. மயக்கும் மோகினி போன்றது காபி.

நன்றி- Raman Krishnamachari.

தாளவாடி மாரியம்மன் திருவிழா-2015

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.தாளவாடி மக்கள் மன்றம் வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.



05.03.2015 தாளவாடி ...
  தமிழக - கா்நாடக எல்லையில்,
தாளவாடி மலை கிராமத்தில் மாாியம்மன் திருவிழா...!

ஈஸ்வர அல்லா தேரே நாம் ...
மாாியம்மன் கோவிலும்,
பள்ளிவாசலும் மிக அருகருகே அமைந்துள்ளது.
பள்ளிவாசலில் நாள்தோறும்
தொழுகை நடைபெற்று வருகிறது.
மாாியம்மன் கோவிலிலும் நாள்தோறும்
வழிபாடும் நடந்து வருகிறது.
யாருக்கிடையிலும் எந்த சண்டையும் இல்லை.
கடவுள்களுக்கு இடையில் எப்போதும் சண்டையும் வராது. அவர்கள் பெயரால் சண்டை உருவாக்குவது நாம்தான்.

நல்லிணக்கத்திற்கு உதாரணமாக தாளவாடியில்
நிலவும் இந்த நிலை என்றென்றும் நீடிக்கட்டும்.
நாடுமுழுவதும் பரவட்டும்....

தாளவாடி மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்....
பதிவிட்ட சட்ட மன்ற உறுப்பினர் P.L.சுந்தரம் அவர்களுக்கு நன்றிங்க.