திங்கள், 2 நவம்பர், 2015

பயணிகள் நூலகம்-தாளவாடி வட்டம்.

பயணிகள் நூலகம் மலைக்கிராம மக்களுக்காக பயணிக்கும் நூலகம்.

வளர்ப்போம் மலைவாழ் மாணவர்களின் அறிவை வளர்ப்போம். 
புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஞானாலயா நூலகத்தைப்போல இல்லாவிடினும் எங்களால் ஆன சிறு முயற்சிதாங்க இது.

நீங்களும் சமூகப்பணியில் பங்கேற்கலாமே!.
        'பயணிகள் நூலகம்' மிகவும் பின்தங்கியுள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான இயக்கம் என்பதை அறிந்துகொண்டேன்.ஆதலால்இவ்வியக்கத்தை  சுயநலனுக்காகவோ,அரசியல் ,சாதி,மத,இன,மொழி ஆதாயத்திற்காகவோ பயன்படுத்த மாட்டேன்.என்ற உறுதிமொழி ஏற்புடன் இணைவீர்.  



மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். தாளவாடி வட்டம்.ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள மலைக்கிராமங்கள் நிறைந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டதாகும். அதாவது இங்குள்ள பழங்குடியின மக்கள் வாழும் மலைக்கிராமங்கள் வனப்பகுதியில் அமைந்துள்ளன.
       தாளவாடி வட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேனிலைப்பள்ளி,அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி, அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளிகள்,அரசு மேனிலைப்பள்ளிகள், அரசு நடுநிலைப்பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட கல்வியறிவை போதிக்கும் பள்ளிகள் இருப்பினும் மலைக்கிராமங்களில்  பொதுஅறிவை வளர்க்க, உலக நடப்புகளை அறிந்துகொள்ள,தன்னம்பிக்கையை வளர்க்க,சட்ட அறிவைப்பெற,நுகர்வோர் உரிமைகள் மறும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெற,உயர் கல்வி ஆலோசனை பெற உள்ளிட்ட சமூக அடிப்படை அறிவைப் பெற  நூலகங்கள்,படிப்பகங்கள்,நாளிதழ்கள்,இணையதள வசதிகள் ,கணினி வசதிகள் இல்லாமல் பொதுமக்களும்,இளைய சமூகமும்,இருபால் மாணவர்களும் அவதிப்படும் அவலநிலை இன்றைய சூழலிலும் நீடித்து வருகிறது என்பதை நேரில் அறியும்போது மன வேதனை அடைகிறோம்.எனவே மலைக்கிராம மக்களின் அறிவைப்பெருக்கும் நோக்கத்தில் 2015 நவம்பர் 1ந் தேதி முதல் பயணிகள் நூலகம் என்ற பெயரில் பயணிக்கும் நூலகத்தை துவக்கியுள்ளோம்.முதல் முயற்சியாக குளியாடா,ஒசட்டி,கோட்டாடை,தேவர் நத்தம்,மாவள்ளம்,அரேப்பாளையம்,ஆசனூர் மலைக்கிராமங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில  நாளிதழ்கள் தினமும்  வாங்கி அனுப்பி வருகிறோம்.சுயநலம் கருதாமல் அரசியல்,மதம்,இனம்,மொழி,சாதி வேறுபாடின்றி மனித சமூக மேம்பாட்டிற்கான நிகழ்வாக செயல்படுத்துவது என உறுதிகொண்டு இயங்கி வருகிறோம்.மலைவாழ் இருபால் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தவும்,பொது அறிவை வளர்க்கவும்,தன்னம்பிக்கை பெறவும்,அரசு நலத்திட்டங்கள்,மானியங்கள்,இலவசங்கள்,கல்வி உதவிகள்,வேலை வாய்ப்புகள்,தொழில் வாய்ப்புகள்,அத்தியாவசியத்தேவைகள்,நுகர்வோர் உரிமைகள்,சாலை பாதுகாப்பு விதிகள்,சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கல்வி,உடல் பாதுகாப்பு,கண் பாதுகாப்பு,சுகாதாரம்,எயிட்ஸ்  விழிப்புணர்வு,இயற்கை வளம் பாதுகாப்பு,அறிவியல் தொழில்நுட்பங்கள்,முதலுதவி,மருத்துவத்தாவரங்கள் பாதுகாப்புக்கல்வி,இயற்கை வைத்தியம்,அரசியல் சாசன விதிகள்,சட்டவிழிப்புணர்வு,ஆயுள் காப்பீடு,தகவல் அறியும் உரிமைகள்,வரலாறு,பொதுச்சேவை பற்றிய விழிப்புணர்வு,கிராமியக்கலைகள்,நாட்டுப்புறப்பாடல்கள்,விடுகதைகள்,நாடகங்கள்,
திருக்குறள்,பாரதியார் கவிதைகள்,உட்பட கவிதைகள்,அகராதிகள்,தகவல் களஞ்சியங்கள்,சமையல்,தையல் கலைகள்,சுய தொழில்கள்,கணினி மற்றும் இணையதளப்பயிற்சிகள்,உள்ளிட்ட பல்வேறு வாழ்வுரிமைத்தேவைகளை  கொடுத்து வருகிறோம்.குறிப்பாக அரசு வழங்கும் இலவச கணினிகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யாதீர் என வலியுறுத்தி வருகிறோம்.மாதம் ஒருமுறையாவது ஞா
இறு போன்ற விடுமுறை நாட்களில் மலைக்கிராமங்களுக்கே சென்று கணினி இயக்கும் பயிற்சி கொடுக்க உள்ளோம்.

 போக்குவரத்து தொழிலாளர்களாகிய எங்களால் துவக்கியுள்ள பயணிகள் நூலகத்தினால்  மலைவாழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் தாளவாடி வட்டத்துக்குட்பட்ட கெத்தேசால்,கேர்மாளம்,காடட்டி,அனைக்கரை,கோட்டமாளம்,சுஜில்கரை,
பசுவணாபுரம்,கரளையம்,இருட்டிப்பாளையம்,கடம்பூர்,மாக்கம்பாளையம்,
குன்றி,திம்பம்,காளி திம்பம்,மாவநத்தம்,பெஜலட்டி,ராமரணை,சோளகர் தொட்டி,மற்றும் விடுபட்டுள்ள மலைக்கிராமங்கள் அனைத்துக்கும் நரில் சென்று ஆய்வு செய்து அப்பகுதி மாணவர்களுக்கும்,பொது மக்களுக்கும் நூலக வசதி மற்றும் தினசரி செய்திகளை அறியும் வசதிகளை ஆய்வு செய்து எங்களால் இயன்றளவு பயணிகள் நூலகத்தை விரிவுபடுத்துவது .என தீர்மானம் செய்துள்ளோம்.விருப்பமுள்ள சான்றோர்களிடம் புத்தகங்களாவோ,நாளிதழ்களாகவோ,பொது அறிவு வளர்க்கும் புத்தகங்களாகவோ,மலைக்கிராம மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் புத்தகங்களாகவோ,உயர் கல்வி வழிகாட்டி மற்றும் வாழ்க்கைக்கல்வி வழிகாட்டும் புத்தகங்களாகவோ மட்டுமே பெறுவது எனவும் முடிவு செய்துள்ளோம்.
           எங்களுடன் இணையவும் உதவி செய்யவும் விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய கைப்பேசி எண்கள் 
C.பரமேஸ்வரன்  ஓட்டுநர் +91 9585600733 , 
V. மகேசா நடத்துநர்+91 9486923282, 
  A.P. ராஜூ நடத்துநர்  +91 9487430687  
மின்னஞ்சல் முகவரி paramesdriver@gmail.com 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், ஈரோடு மண்டலம்,தாளவாடி கிளை முகவரியிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக